கல்லூரியைப் பற்றி
வேலூர் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் ஓர் அங்கம்
ஏன் தொடங்கினோம்
“ஒரு பெண் கல்வி பெறுவது ஒரு பரம்பரையே கல்வி பெறுவதற்கு இணையானது.” “மனிதனின் முதல் பள்ளிக்கூடம் தாயின் மடிதான்.” ஒரு பெண் சீரான கல்வியையும் சரியான வழிகாட்டுதலையும் பெற்றால், ஒட்டுமொத்த குடும்பமும் நல்வழியில் நடைபோடும்.
நமது சமுதாயத்தில் பல பெண்கள் மார்க்கக் கல்விக்கும் உலகக் கல்விக்கும் இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இறையருளால், இந்த நிலையை மாற்ற வேலூரில் சில நல்லுள்ளங்கள் முன்வந்துள்ளனர்.
பெண்களுக்கு மார்க்கக் கல்வியுடன் நவீனக் கல்வியையும் திறன்களையும் பாதுகாப்பான சூழலில் வழங்கும் வகையில் ‘குல்லியத்துல் ஹிதாயா’ எனும் மகளிர் கல்லூரியை அவர்கள் நிறுவியுள்ளனர்.
கல்லூரியின் இலக்கு
மார்க்க ஞானமும் அறிவாற்றலும் மிக்க பெண் ஆளுமைகளை உருவாக்கி, அவர்களின் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ளவர்களாக மாற்றுதல்; தனிப்பட்ட, குடும்ப, சமூக வாழ்வில் முன்மாதிரிகளாக அவர்களைச் செதுக்குதல்; பன்முக ஆற்றலும் திறமையும் மக்கள் சேவையில் அக்கறையும் கொண்ட இளைய தலைமுறைப் பெண்களை உருவாக்குதல்.
கல்லூரியின் குறிக்கோள்
உலகக் கல்வி, மார்க்கக் கல்வி இரண்டையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட நவீன பாடத்திட்டத்தின் மூலம் மாணவிகள் சுய வலிமை பெறுவதற்கும், சிறந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாய்த் திகழ்வதற்கும், வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இஸ்லாமிய வழிகாட்டுதலுடன் சமூகத்தில் பங்கு பெறுவதற்கும் தெளிவான பாதை அமைத்தல்.
எங்கள் முழக்கம்
اللّٰهُمَّ إِنَّا نَسْأَلُكَ عِلْمًا نَافِعًا
யா அல்லாஹ், பயனுள்ள கல்வியை உன்னிடம் கேட்கிறோம்.