بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
كلية الهداية للبنات
மார்க்கம் கற்போம்.திறன் வளர்ப்போம்.நோக்கத்துடன் வழிநடத்துவோம்.
மூன்றாண்டு ஆலிமா பட்டப்படிப்புடன் அரசு அங்கீகாரம் பெற்ற SSLC (10ஆம் வகுப்பு), +2 பாடத்திட்டம், திறன் மற்றும் ஆளுமை மேம்பாட்டு வகுப்புகள். விடுதி வசதி உண்டு.
3 ஆண்டுகள்
ஆலிமா படிப்பு, ஆண்டுக்கு இரண்டு செமஸ்டர்கள்
SSLC & +2
NIOS வழியாக அரசு பாடத்திட்டம்
விடுதி
கண்காணிப்புடன், வளாகத்திலேயே
மாணவிகள் கற்பவை
மாணவிகள் குர்ஆனையும் இஸ்லாமிய அறிவியல்களையும் ஆழமாகக் கற்று, வாழ்க்கைக்கும் வேலைக்கும் தேவையான திறன்களுடன் SSLC (10ஆம் வகுப்பு), +2 படிப்பை நிறைவு செய்கின்றனர்.
மார்க்கக் கல்வி
- அரபு மொழி
- குர்ஆன்
- தஜ்வீத்
- மனனம்
- குர்ஆனை அணுகும் முறை
- ஹதீஸ் பாடங்கள்
- ஃபிக்ஹுச் சட்டங்கள்
- நபிமார்களின் வரலாறு
- இஸ்லாமிய வரலாறு
- ஒழுக்கப் பயிற்சி
இத்துடன்
- அரசு அங்கீகாரம் பெற்ற SSLC (10ஆம் வகுப்பு), +2 பாடத்திட்டம்
- திறன் மேம்பாட்டு வகுப்புகள்
- ஆளுமை மேம்பாட்டு வகுப்புகள்
- கணினி, பேஷன் டிசைனிங் மற்றும் மெஹந்தி வடிவமைப்புப் படிப்புகள்
எங்கள் முழக்கம்
اللّٰهُمَّ إِنَّا نَسْأَلُكَ عِلْمًا نَافِعًا
யா அல்லாஹ், பயனுள்ள கல்வியை உன்னிடம் கேட்கிறோம்.
2026–27 கல்வி ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது
ஆலிமா படிப்பில் சேர்வதற்கான தகுதிகள்
- 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- திருக்குர்ஆன் ஓதத் தெரிந்திருக்க வேண்டும்
- வளாகத்திலேயே மாணவிகளுக்கான தனி, பாதுகாப்பான விடுதி
- பெண் பணியாளர்களின் முழுநேரக் கண்காணிப்பு
- வீட்டு முறையிலான சத்தான உணவு
- தினசரி கூட்டுத் தொழுகை மற்றும் குர்ஆன் மீளாய்வு
- ஆசிரியைகளின் உதவியுடன் வரையறுக்கப்பட்ட படிப்பு நேரம்
கல்லூரிச் செய்திகள்
அனைத்துச் செய்திகளும்கல்லூரிக் கட்டடத்திற்கு உதவுங்கள்
அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்போர் (உங்களில்) யார் உளர்? (அப்படிக் கடன் கொடுத்தால்) அல்லாஹ் அதனைப் பல மடங்குகளாக்கி அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பான். அல்லாஹ்தான் (செல்வத்தைக்) குறைக்கவும் பெருக்கவும் செய்கின்றான். நீங்கள் அவன் பக்கமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
கல்லூரிக் கட்டடத்திற்கான நிதி திரட்டப்படுகிறது. கல்விக்கூடத்திற்கு வழங்கும் கொடை சதக்கத்துல் ஜாரியா ஆகும்: மாணவிகள் பயன்பெறும் காலமெல்லாம் அதன் நன்மை தொடரும்.
கட்டடப் பணிக்கு உதவுங்கள்