அனைத்துச் செய்திகளுக்கும் திரும்ப

நிகழ்வு

கல்லூரி துவக்க விழா

ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் துவக்க விழா 18-8-2025 திங்கட்கிழமை அன்று வேலூர், R.N. பாளையம் இஸ்லாமிக் சென்டர் வளாகத்தில் நடைபெற்றது.

A speaker at the podium beneath the college banner

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையினால், ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் துவக்க விழா 18-8-2025 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு வேலூர், R.N. பாளையம், மதார் சாஹெப் தெருவில் உள்ள இஸ்லாமிக் சென்டர் வளாகத்தில் நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தமிழ்நாடு & புதுச்சேரி தலைவர் மவுலவி முஹம்மத் ஹனீஃபா மன்பயீ அவர்கள் தலைமை தாங்கினார்கள். வேலூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த அறிஞர்களும் சமுதாயப் பெரியோர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர். விழா மேடையில் கல்லூரிச் சிற்றேடு வெளியிடப்பட்டது.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும், தங்கள் துஆக்களாலும் உதவிகளாலும் கல்லூரிக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றி.

படங்கள்